வெயிலின் தாக்கத்தால் தர்பூசணி பழம் விற்பனை அமோகம்.

0பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து, பகல் நேர வெயில் அதிகரித்துள்ளது. இதனால், தர்பூசணி பழங்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. திண்டிவனம், திருவண்ணாமலை போன்ற இடங்களில் இருந்து லாரிகள் மூலம் கொண்டுவரப்படும் தர்பூசணி பழங்கள் கிலோ ரூ. 20 முதல் 25 வரை விற்பனையாகின்றன. வரும் நாட்களில் இதன் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி