வெப்பாலம்பட்டி மைதானம்: கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு!

495பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வெப்பாலம்பட்டி ஊராட்சி விளையாட்டு மைதானம் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி சகதியாகவும், சுகாதார சீர்கேடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். கழிவுநீர் வெளியேற பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும், நெடுஞ்சாலைத்துறை ஆய்வு செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக பாலம் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.