கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 39 வயதான சூர்யாபேகம், தொடர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்த அவர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார், சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.