
ஓசூர் அருகே சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒன்னல்வாடி பகுதியைச் சேர்ந்த கவுதமன் (30) என்பவர், ஓசூர் பஸ்தி ராகவேந்திரா காலனியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பத்தலப்பள்ளி அருகே ஈச்சர் லாரி மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.















