கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்தது தேர்பேட்டை பகுதியில் பழமையான அரசு மரம் ஒன்று உள்ளது. அதில் இருந்த தேனீக்கள் திடீரென நேற்று அந்த பகுதியில் இருந்த பொதுமக்களை கொட்டியது தொடங்கியது.
இதில் ஆண்கள் 14 பேரும் பெண்கள் 12 பேரும் ஒரு குழந்தையும் உள்ளிட்ட 27 பேர் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் வெங்கடேஷ் (70) என்ற முதியவர் மட்டும் கவலைக்கிடமாக உள்ளார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.