கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள பாகலூர் கோட்டையைச் சேர்ந்தவர் மகேந்திரன் (37). பூ வியாபாரம் செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு இவர் தனது மனைவியைக் கொலை செய்தார்.
இது தொடர்பாக பாகலூர் போலீசார் கொலை வழக்கில் விசாரித்து மகேந்திரனைக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவர் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.