ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயது டிங்கு, மது போதையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கடந்த 15-ஆம் தேதி அன்று பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.