கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொம்மண்டப்பள்ளியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (33) என்ற தனியார் நிறுவன ஊழியர், குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.