ஓசூர் அருகே டூவீலர் மீது லாரி மோதிவாலிபர் பலி.

2பார்த்தது
ஓசூர் அருகே டூவீலர் மீது லாரி மோதிவாலிபர் பலி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் படுதேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முகமது ஆசீப் (19) என்பவர், கடந்த 7-ஆம் தேதி அன்று மாலை நண்பர் சையத் (20) உடன் இருசக்கர வாகனத்தில் பெங்களூரு-ஓசூர் சாலை சுண்ணாம்பு ஜீபி மேம்பாலம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் முகமது ஆசீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சையத் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.