கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கவுஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (22), ஒசூரில் விளம்பர பதாகைகள் அமைக்கும் ஒப்பந்ததாரராகப் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் ஒசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி அருகே நின்றுகொண்டிருந்தபோது, டூவீலரில் வந்த உஸ்மர் (24) என்பவர் உதயகுமாரை மிரட்டி, அவரிடமிருந்த 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை வழிப்பறி செய்ய முயன்றார். அப்போது உதயகுமார் அந்த நபரைப் பிடித்து சிப்காட் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறி செய்ய முயன்றது ஓசூர் பிஸ்மில்லா நகரைச் சேர்ந்த உஸ்மர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் உஸ்மரை கைது செய்தனர்.