கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பாகலூர் சாலை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் வெல்டிங் மிஷன் மூலம் உடைத்து, நேற்று முன்தினம் இரவு சுமார் ரூ. 1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒசூர் அட்கோ போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.