ஓசூரில் கஞ்சா புகைத்த சிறுவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம்.

0பார்த்தது
ஓசூரில் கஞ்சா புகைத்த சிறுவர்கள் போலீசாரை கண்டதும் ஓட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வசந்த்நகரில் நேற்று முன்தினம் வாலிபர்கள் சிலர் ஒன்று கூடி கஞ்சா புகைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கஞ்சா புகைத்த வாலிபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் துரத்தி சென்ற போது வேறு பகுதியில் ஓடி தலைமறைவானார்கள். தலைமறைவான வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி