கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, ஆர். வி. அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று 06. 02. 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், லயன் டேட்ஸ் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் 29,720 அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ. 65 லட்சம் மதிப்பில் ஊட்டச்சத்து மிக்க லயன் டேட்ஸ் தொகுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் எஸ். ஏ. சத்யா, கல்வி மாவட்ட அலுவலர் ரமாதேவி, தலைமையாசிரியர் வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. மனோகரன், லயன் டேட்ஸ் நிறுவன மேலாளர் முத்துராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.