கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் பல் கிளினிக் நடத்தி வருபவர்
பல் மருத்துவர் அன்புசெல்வன். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. அன்புசெல்வனின் பல் மருத்துவமனைக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 25 வயதுள்ள இளம் பெண் மருத்துவர் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த இளம் பெண் சகஜமாக பழகி வந்த நிலையில் அவரை 2-வது திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணிடம் அன்புசெல்வன் கேட்டுள்ளார். இதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகாரின் பேரில் அன்புசெல்வனை ஓசூர் நகர போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.