கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே படுதேப்பள்ளி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கரியால லிங்கேஸ்வரர் சாமி கோவிலில் புதிதாக கட்டப்பட்ட கோபுர நுழைவு வாயிலுக்கு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவில் பீரேஸ்வரா, கரியலிங்கேஸ்வரர், உஜ்ஜினி லிங்கேஸ்வரர் மற்றும் லக்கம்மா தேவி உற்சவர்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மேளதாளங்களுடன் கோவிலை சுற்றி உலா கொண்டு வரப்பட்டது. குரும்பர் இன மக்கள் அலங்கரிக்கப்பட்ட காளைகளுக்கு முதலில் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். பின்னர், விரதமிருந்த பக்தர்களின் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.