கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (40). டிரைவர். இவரது மனைவி ஆர்த்தி (35) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மஞ்சுநாத் சரிவர வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். இதுகுறித்து ஆர்த்தி விசாரித்த போது, மஞ்சுநாத், ஜோதி (32) என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஓசூர் ஒன்னல் வாடியில் வீடு பார்த்து வைத்து குடும்பம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆர்த்தி தனது கணவர் மஞ்சுநாத்திடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மஞ்சுநாத், ஆர்த்தியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத்தைக் கைது செய்தனர்.