தளி அருகே மாந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்

54பார்த்தது
தளி அருகே மாந்தோப்பில் புகுந்து யானைகள் அட்டகாசம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள தாசிரப்பள்ளி கிராமத்திற்குள் 10-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. அருகில் உள்ள சந்திராரெட்டி என்பவர் தோட்டத்தில் புகுந்து மாமரங்களை முறித்தும் காய்களைத் தின்றும் சேதப்படுத்திச் சென்றுள்ளன. இதனிடையே நேற்று முன்தினம் காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றபோது யானைகள் மரங்களை முறித்தும் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தற்போது மா அறுவடை தொடங்கியுள்ள நிலையில் யானைகள் மாங்காய்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி