கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோகுல் நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் மணி (52). தள்ளுவண்டி வியாபாரி. இவர் மனைவி காளியம்மாள். இவர்கள் 2 பேரும் நேற்று வியாபாரத்திற்கு சென்று விட்டார். இந்த நிலையில் மணி வீட்டில் மதியம் திடீரென தீப்பிடித்து கொண்டது.
அருகில் அருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர் அதற்குள் வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியும் சேதமடைந்தன. இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.