மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த தலைமைக் காவலரை கைது.

0பார்த்தது
மதுபாக்கெட்டுகளை கடத்திவந்த தலைமைக் காவலரை கைது.
ஒசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் நேற்று வாகன தணிக்கையின் போது, கர்நாடகாவில் இருந்து வந்த காரில் இருந்து 528 கர்நாடக மதுபாக்கெட்டுகளை சிப்காட் போலீசார் பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்தவர், நாகரசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் நாகராஜ் (41) என்பது தெரியவந்தது. நாகரசம்பட்டியில் விற்பனைக்காக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்ததாக அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து நாகராஜை போலீசார் கைது செய்து, மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி