கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2015-ஆம் ஆண்டு மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் பா்கத், மதியரசன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சிவகுமாரை கத்தியால் குத்தி, கல்லால் தாக்கி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் அவரது நண்பரான மதியரசனுக்கு (32) ஓசூர் நீதிமன்றம் நேற்று இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிபதி, குற்றவாளிக்கு தண்டனையுடன் ரூ. 2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மதியரசன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.