கிருஷ்ணகிரி மாவட்டம், ஊடேதுர்க்கம் அடர் வனப்பகுதியிலிருந்து சுமார் 40 யானைகள் சாலமாவு வனப்பகுதி நோக்கி நகர்ந்துள்ளன. இதனால், டி. கோத்துப்பள்ளி, சானமாவு, வீச்சரப்பள்ளி, குப்பம்பேபள்ளி போன்ற வனப்பகுதிகளுக்கு அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். யானைகளின் நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் சற்று அச்சம் நிலவுகிறது.