கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் மின்வாரிய அலுவலகத்தில் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமை வகித்தார், ஓசூர் செயற்பொறியாளர் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மின் நுகர்வோர் கோரிக்கைகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் வசதி பற்றி விவாதிக்கப்பட்டது.