ஓசூர்: டிரைவரிடம் செல்போன் பறித்த 3 பேருக்கு காப்பு

52பார்த்தது
ஓசூர்: டிரைவரிடம் செல்போன் பறித்த 3 பேருக்கு காப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கோபி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (22) டிரைவர். இவர் ஓசூர் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் (அக்-2) நடந்து சென்றார். அப்போது அங்கு நின்ற சிலர் ஸ்ரீதரை மிரட்டி அவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதுகுறித்து ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி ஓசூரை சேர்ந்த ராஜேஷ்குமார் (40) சந்தோஷ் (21) பிரவீன்குமார் (19) ஆகியோரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி