கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் சின்ன எலசகிரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பூங்கொடி (50) என்ற பெண்ணை நிறுத்தி சோதனை செய்ததில், அவரிடமிருந்து 2 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விற்பனைக்காக புகையிலை கொண்டு சென்றதாக அவர் கூறியதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.