கிருஷ்ணகிரி: 3 மடங்கு லாபம்.. ரூ. 6.50 கோடி மோசடி

980பார்த்தது
கிருஷ்ணகிரி: 3 மடங்கு லாபம்.. ரூ. 6.50 கோடி மோசடி
ஓசூரைச் சேர்ந்த இளவரசு(38) தலைமையில் மே 21 அன்று 75-க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். கார்த்திக் என்பவர், இளவரசு நிர்வாகக் குழுவில் இருப்பதாகவும், 'விதை முதல் விற்பனை' திட்டத்தை செயல்படுத்துவதாகவும் கூறியதை நம்பி பலர் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதன் மூலம் 75 பேரிடம் ரூ. 6.50 கோடி மோசடி நடந்ததாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரக் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி