கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த அப்துல் காதர் என்பவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் காதர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.