கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள நல்லூர் போலீசார் அனுமந்த்நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகநபரை பிடித்து போலீசார் சோதனையிட்ட போது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் பாகலூர் சாலை தனராஜ் (32) என்பதும், கஞ்சா விற்பனை செய்வதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.