ஓசூர் அருகே 2 டூவீலர்களை திருடிய நபர் கைது.

5பார்த்தது
ஓசூர் அருகே 2 டூவீலர்களை திருடிய நபர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருசக்கர வாகனங்கள் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார். ஓசூர் மூக்கண்ட பள்ளி எம். ஜி. ஆர். நகரைச் சேர்ந்த பிரசாந்த் (28) மற்றும் அலசநத்தம் சிவா நகரைச் சேர்ந்த அகிலன் (29) ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் திருடுபோனது. இது தொடர்பாக ஓசூர் அட்கோ காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (20) என்பவரே இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அன்பழகனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து திருடப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி