ஒசூர்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் தற்கொலைக்கு முயற்சி

905பார்த்தது
ஒசூர்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த நபா் தற்கொலைக்கு முயற்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண், சத்தியமங்கலம் கிராமத்திற்கு நடந்து சென்றபோது மூர்த்தி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பாகலூர் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், தேடப்பட்டு வந்த மூர்த்தி நேற்று பாகலூர் காவல் நிலையம் அருகே பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, ஒசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்தி