ஓசூரில் கபடி போட்டி-பரிசு வழங்கிய அமைச்சர்.

9பார்த்தது
ஓசூரில் கபடி போட்டி-பரிசு வழங்கிய அமைச்சர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 38 மாவட்டங்களிலிருந்து 40 அணிகள் பங்கேற்றன. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு 1 லட்சமும், மூன்றாவது மற்றும் நான்காவது பரிசுகளாக தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டன. பெண்கள் பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
Job Suitcase

Jobs near you