பேரிகை: சிக்கன் கடைக்காரரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது.

0பார்த்தது
பேரிகை: சிக்கன் கடைக்காரரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே ஏ. செட்டிப்பள்ளியில் சிக்கன் கடை நடத்தி வரும் பாபு (48) என்பவர், கடந்த 16-ஆம் தேதி பல்பொருள் அங்காடிக்கு சென்றபோது, திம்மராஜ் (23) என்பவருடன் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கப்பட்டார். காயமடைந்த பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் பேரிகை போலீசார் திம்மராஜை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.