கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்த ஆனந்த் (25) என்பவர், 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் ஆனந்தை தேடி வந்த நிலையில், 17 நாட்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.