கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மஞ்சள் மற்றும் வெள்ளை சாமந்தி பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது சீசன் இல்லாததாலும், வறட்சியாலும் சாமந்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒசூர் மலர் சந்தையில் ஒரு கிலோ சாமந்தி பூவின் விலை ரூ. 240 முதல் ரூ. 300 வரை விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் சாமந்திக்கு இணையாக வெள்ளை சாமந்தியின் விலையும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.