மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் பினோத் (28) இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு எச். எஸ். ஆர். லேஅவுட் பகுதியில் தங்கி தனியார் பைக் டாக்சி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த பினோத் நேற்று முன்தினம கிருஷ்ணகிரி சூளகிரி அருகே உள்ள சின்னாறு உள்ள வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த சூளகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.