டூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

0பார்த்தது
டூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (30), ஒசூர் மூக்கண்டப்பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 8-ஆம் தேதி, அவர் ஒசூர்-ஆவலப்பள்ளி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் படுகாயமடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.