உத்தனப்பள்ளி அருகே மாடு திருடிய வாலிபருக்கு காப்பு

54பார்த்தது
உத்தனப்பள்ளி அருகே மாடு திருடிய வாலிபருக்கு காப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள உத்தனப்பள்ளி அடுத்த கனிஞ்சூரை சேர்ந்தவர் கோபால்(61). விவசாயியான இவர் கடந்த 27-ம் தேதி அன்று மாலை தனது வீட்டின் அருகில் கறவை மாட்டை கட்டியிருந்தார். மறுநாள் காலை பார்த்த போது மாட்டை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளதை அறிந்த கோபால் இதுகுறித்து உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சூளகிரி அருகே சின்ன பேட்டகானப்பள்ளி பகுதியை சேர்ந்த மூர்த்தி(25) என்பவர் மாட்டை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் (நவம்பர் 28) கைது செய்த போலீசார் மாட்டை மீட்டு மூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.
Job Suitcase

Jobs near you