சூளகிர: 3 கிராமங்கள் சாலை மறியல்.

1பார்த்தது
சூளகிர: 3 கிராமங்கள் சாலை மறியல்.
சூளகிரி அருகே கொட்டாயூர், துறிஞ்சிப்பட்டி உள்ளிட்ட 3 கிராம மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு வனப்பகுதிக்குள் செல்லவும், வீடு கட்டவும், விவசாயம் செய்ய புதிய போர்வெல் அமைக்கவும் வனத்துறையினர் அனுமதிப்பதில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 2 கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நேற்று சூளகிரி-ராமன்தொட்டி சாலையில் உள்ள காருபல்லா என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த சோளக்கரை போலீசார் மற்றும் வனத்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி