கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், பேரிகை ஊராட்சி, கே.என்.தொட்டி கிராமத்தில், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்ட கள ஆய்வில், தோட்டக்கலைத்துறை சார்பாக, விவசாயி கிருஷ்ணய்யா ரூ.17 இலட்சத்து 50 ஆயிரம் மானியம் பெற்று ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை மற்றும் குளிரூட்டும் அறை அமைக்கப்பட்டு, சாகுபடி செய்யப்பட்ட ரோஜா மலர்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் இன்று 19.03.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், ஓசூர் சார்ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சையப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.