ஓசூரில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.

2பார்த்தது
ஓசூரில் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் சாலையில் உள்ள அழகன் மலை முருகன் கோயிலில் நேற்று வைகாசி விசாக பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவர் முருகனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டது. பின்னர், முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி