கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 13 வயது மணிசங்கர், நேற்று தனது நண்பருடன் பாகலூரில் உள்ள பட்டாளம்மன் ஏரியில் குளித்தபோது, நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மணிசங்கரின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.