ஒசூா் அருகே நகரப் பேருந்தை சிறை பிடித்து மாணவா்கள் மறியல்

69பார்த்தது
ஒசூா் அருகே நகரப் பேருந்தை சிறை பிடித்து மாணவா்கள் மறியல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் - பேரிகை சாலை புனுகன்தொட்டி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமப் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் தினமும் ஒசூர் பகுதிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நகரப் பேருந்தானது, கடந்த ஒரு மாதமாக சரியான நேரத்தில் வருவதில்லை என்று இதனைக் கண்டித்து, பள்ளி மாணவர்கள் புனுகன்தொட்டி கிராமத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.