ஓசூர் அருகே இளைஞரை காரில் கடத்தி கொன்று வீசிய கொடூரம்.

0பார்த்தது
ஓசூர் அருகே இளைஞரை காரில் கடத்தி கொன்று வீசிய கொடூரம்.
சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் அருகே வியாபாரி அழகுராஜாவை கொலை செய்து, சடலத்தை காரில் வீசிய வழக்கில் பிளம்பர் முருகேசன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த முருகேசனை, அழகுராஜாவின் அண்ணன் ராஜசேகர் கொலை செய்ய முயன்றார். இதற்கிடையில், டீக்கடை ஊழியர் கோகுல்ராஜ் கொடுத்த தகவலின் பேரில் முருகேசன் இருக்கும் இடத்தை அறிந்த ராஜசேகர், அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், கோகுல்ராஜை அடித்து கொலை செய்து ஏரியில் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.