ஓசூரில் பேருந்தில் போதை மாத்திரை கடத்திய மூன்று பேர் கைது.

0பார்த்தது
ஓசூரில் பேருந்தில் போதை மாத்திரை கடத்திய மூன்று பேர் கைது.
ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே நேற்று இரவு சிப்காட் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து கோவைக்குச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் சோதனை செய்தபோது, பயணிகள் 3 பேர் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரைகளாகப் பயன்படுத்த கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, கோவையைச் சேர்ந்த ஸ்ரீதரன் (30), பிரதீப் (29), நந்தகோபால் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 660 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Job Suitcase

Jobs near you