ஒசூரில் புலிகள் கணக்கெடுப்பு 19-ம்தேதி தொடக்கம்.

0பார்த்தது
ஒசூரில் புலிகள் கணக்கெடுப்பு 19-ம்தேதி தொடக்கம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்ட வனப்பகுதியில் வரும் ஜனவரி 19-ம் தேதி முதல் புலிகள் கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனப்பயிற்சி மையம் இணைந்து வனத்துறையின் பங்களிப்புடன் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் இந்த கணக்கெடுப்பை நடத்துகின்றன. இதில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள், சம்பந்தப்பட்ட வன அதிகாரிகளை நேரடியாகவோ அல்லது 1800-425-5135 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி