கிருஷ்ணகிரி: டிராக்டர்-டூவீலர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி

66பார்த்தது
கிருஷ்ணகிரி: டிராக்டர்-டூவீலர் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகிலுள்ள ஏ. திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (24). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்றுமுன்தினம் டூவீலரில் போச்சம்பள்ளி-கொடமாண்டப்பட்டி சாலையில் சென்றபோது பி. திப்பம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த டிராக்டர் டூவீலரில் மோதியதில் சதீஷ்குமார் படுகாயமடைந்தார். அவரை மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி