சூளகிரி அருகே கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்

72பார்த்தது
சூளகிரி அருகே கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்துள்ள தியாகராயனபள்ளி வி.ஏ.ஓ. சந்தர் மற்றும் அலுவலர்கள், நல்லகனகொத்தபள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சாலை ஓரத்தில் நின்ற டிராக்டரை சந்தேகத்தின் பேரில் அவர்கள் சோதனையிட்ட போது அதில் ஒரு யூனிட் கற்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அதை அடுத்து வி.ஏ.ஓ. சந்தர் சூளகிரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி