கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தனியார் நிறுவன மகளிர் விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, வீடியோ எடுத்த ஒடிசா மாநில பெண் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நீலுகுமாரியின் ஆண் நண்பர் சந்தோஷ்(எ)சதீஷ்குமார் பெங்களூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவரை கைதுசெய்ய கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.