கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூதிநத்தம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மனைவி ஸ்ரீமதி (21) தலைவலிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.