கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூா், தளி, பா்கூா், ஊத்தங்கரை (தனி), வேப்பனஅள்ளி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற்றது. மொத்தம் 182 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 126 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்கள் வேட்பாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன.