கிருஷ்ணகிரியில் 18 பேருக்கு அபராதம்

59பார்த்தது
கிருஷ்ணகிரியில் 18 பேருக்கு அபராதம்
கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிநவீன டூவீலர்களில் செல்வோர், அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும், பிற வாகனங்களுக்கு இடையூறாகவும் டூவீலர்களை இயக்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை உத்தரவின்பேரில் நேற்று கிருஷ்ணகிரி அருகே உள்ள சுங்கசாவடி வழியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்ற டூவீலர்களை தடுத்து நிறுத்தி 18 பேருக்கு அபராதம் விதித்தனர்.